தி.மு.க ஆட்சியில் 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 2,49,392 பேர் பணிநியமனம்: சட்டசபையில் அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

3 hours ago 2

சென்னை: தி.மு.க ஆட்சியில் 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 நபர்களுக்கு இளைஞர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ‘‘தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 392 நபர்களுக்கு இளைஞர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’’ என்றார்.

The post தி.மு.க ஆட்சியில் 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 2,49,392 பேர் பணிநியமனம்: சட்டசபையில் அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article