சென்னை: தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர சீரிய பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 2011ம் ஆண்டு தண்டையார்பேட்டை காவல் நிலைய கொலை வழக்கில் 4 குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,25,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
16.11.2011 அன்று, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சிவராயன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணா (எ) கருணாகரன், வ/35, த/பெ.நீலமேகம் என்பவரை சிலர் கத்தியால் தாக்கி கொலை செய்தது தெடர்பாக H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் 1.வெங்கட்டா (எ) வெங்கடேசன், த/பெ.மாசிலாமணி வள்ளுவன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, 2.சந்திரசேகர், வ/49/2024, த/பெ.பொன்ராஜ், சஞ்சீவராயன் கோயில் தெரு, கோடம்பாக்கம், 3.அசோக்குமார், வ/48/2024, த/பெ.முருகேசன், டிஃபன்ஸ் லேன், வியாசர்பாடி, சென்னை, 4.ராதாகிருஷ்ணன், வ/38/2024, த/பெ.ராமானுஜம், ராணி அண்ணாநகர், அரும்பாக்கம், 5.பாபு, வ/45/2024, த/பெ.சதாசிவம், எம்.எஸ்.பி.நகர், சென்னை, ஆகிய 5 நபர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அப்போதைய H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு (தற்போது உதவி ஆணையாளர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு) தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியன், தலைமை காவலர் திருமதி.விமலா (பெ.த.கா.27779) ஆகியோரால் முறையாக விசாரிக்கப்பட்டு, சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகளில் வெங்கட்டா (எ) வெங்கடேசன் என்பவர் இறந்துவிட்டதால், மற்ற 4 குற்றவாளிகள் சந்திரசேகர், அசோக்குமார், ராதாகிருஷ்ணன், பாபு ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, 4 எதிரிகளுக்கும் ஆயுள் சிறைதண்டனை மற்றும் தலா ரூ.1,25,000/- அபராதமும் விதித்து, கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
2019ம் ஆண்டு அண்ணாநகர் காவல் நிலைய கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
02.01.2019 அன்று, சென்னை, அண்ணா நகர் கிழக்கு, அன்னை சத்யா நகர், 2வது மெயின் ரோட்டில் வசித்து வந்த சந்தானம், வ/36, த/பெ.பார்த்தசாரதி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக K-4 அண்ணா நகர் காவல் நிலையத்தில், கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் 1.ஜோசப், வ/18, த/பெ.எட்வின், அன்னை சத்யா நகர் 1வது தெரு, அண்ணா நகர் கிழக்கு, 2.சதிஷ், வ/25, தெ/பெ.ரவிச்சந்திரன், அன்னை சத்யா நகர், 3.ராபர்ட், வ/21, த/பெ.எட்வின், அன்னை சத்யா நகர், 4.விமல்ராஜா, வ/19, த/பெ.திவாகர், K பிளாக், அண்ணா நகர் ஆகிய 4 நபர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயதுடைய 3 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்து, சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர் செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 எதிரிகள் மீது 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திலும், 3 இளஞ்சிறார்கள் மீது போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
K-4 அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, சென்னை சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து 22.04.2025 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகளில் எதிரி ராபர்ட் சமீபத்தில் இறந்துவிட்டதால், மற்ற 3 எதிரிகள் ஜோசப், சதிஷ் மற்றும் விமல்ராஜா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, 3 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000/- அபராதமும் விதித்து, அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி 2 கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய தற்போதைய உதவி ஆணையாளர் ரமேஷ்,பாபு, உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன், பெண் தலைமைக் காவலர் திருமதி.விமலா, K-4 அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் அவர்கள் இன்று (24.04.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தந்த காவலர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.