தி.மு.க. அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை - முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் குற்றச்சாட்டு

3 months ago 22

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு, குறிச்சி, போத்தனூர், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை ஆகிய இடங்களில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் கட்சிக்கொடியை முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான செ.தாமோதரன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. மக்களுக்கு எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைதான் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகளாகிய நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article