(தி.மலை) விரைவில் 10 உயர் மட்ட பாலங்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ தகவல் கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் உட்பட 4 ஒன்றியங்களில்

1 day ago 2

 

கலசபாக்கம், மே 10: கலசபாக்கம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அருணகிரி மங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்
சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகர், முருகையன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகதாஸ், ஒன்றிய துணை செயலாளர் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி தலைவர் பிரசன்னா வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மணி முடி பேசினார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் திரும்பும் திசையெல்லாம் எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால் கலசபாக்கம் தொகுதியில் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர் ஒன்றியங்களில் விரைவில் 10 உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், அவை தலைவர்கள் பாண்டுரங்கன், ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தணிகை மலை, காளியப்பன் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராமமூர்த்தி அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கேப்சன்…
அருணகிரி மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பேசினார். உடன் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார்.

 

 

 

 

 

The post (தி.மலை) விரைவில் 10 உயர் மட்ட பாலங்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ தகவல் கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் உட்பட 4 ஒன்றியங்களில் appeared first on Dinakaran.

Read Entire Article