கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

4 hours ago 2

மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ராமராயர் மண்டபம் செல்லும் வழி, ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓபுளாபடித்துறை வைகை தென்கரை பகுதி, வைகை வடகரை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரை மூன்றுமாவடியில் நடந்த கள்ளழகர் எதிர்சேவையில் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது.

The post கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article