தி.நகர் ஸ்பா நிலையத்தில் பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது: 11 இளம்பெண்கள் மீட்பு

3 weeks ago 7

வளசரவாக்கம்: தி.நகர் ஸ்பா நிலையத்தில் வடமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை தி.நகர் டாக்டர் பி.என்.ரோடு முதல் தெருவில் இயங்கும் ஸ்பா நிலையத்தில் வாடிக்கையாளர்களிடம் இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி பாலியல் தொழில் நடத்தி வருவதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்படி, நேற்று முன்தினம் தேனாம்பேட்டை போலீசார், காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல், சம்பந்தப்பட்ட ஸ்பா நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அப்போது, ஸ்பா நிலையத்தில் இருந்த நபர் ஒருவர், இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டியுள்ளார். மேலும், அழகுக்கு ஏற்றப்படி விலை பட்டியலும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு வாடிக்கையாளர் போல் வந்த காவலர், ஸ்பா நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதை உறுதிசெய்து இன்ஸ்பெக்டருக்கு தகவல் அளித்தார்.
அதனை தொடர்ந்து, தேனாம்பேட்டை போலீசார் அதிரடியாக ஸ்பா நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, ராயப்பேட்டை இருசப்பன் தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் (41) என்பவர் 11 வடமாநில இளம்பெண்களை வைத்து பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் அதிரடியாக ஜாகீர் உசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய செல்போன் ஒன்று மற்றும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 11 இளம்பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post தி.நகர் ஸ்பா நிலையத்தில் பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது: 11 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article