தி.நகர் பாஜ அலுவலகத்தில் இந்திய அரசியல் சாசன அமைப்பு தினம் கொண்டாட்டம்

3 months ago 10

சென்னை: தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்திய அரசியல் சாசன அமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாஜ துணைத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா சட்டப்பிரிவு நிர்வாகிகள், வக்கீல்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அம்பேத்கர் உருவப்படத்துக்கு பால்கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து வக்கீல்கள் அனைவருக்கும் பால்கனகராஜ் இனிப்பு மற்றும் அரசியலமைப்பு சட்ட புத்தகங்களையும் வழங்கினார்.

The post தி.நகர் பாஜ அலுவலகத்தில் இந்திய அரசியல் சாசன அமைப்பு தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article