இன்றைய குழந்தைகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு புத்திசாலிகளாகவும், வேகமாகவும் இருக்கிறார்கள் என்கையில் அவர்களை விடவும் புத்திக்கூர்மையுடன் ஆசிரியர்கள் இருப்பதும் இக்காலத்தில் அவசியம். நம் இளைய தலைமுறையின் மனதில் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். அதை எதிர்கால ஆசிரியர்களால் மட்டுமே உருவாக்க முடியும். அதற்கு வெறும் பட்டமும், அனுபவப் பாடம் மட்டும் போதாது. சில நுணுக்கங்களும் அவசியம். இதற்குதான் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் ‘தி டீச்சர்ஸ் ஆப்’ (The Teachers App) வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செயலி இணையம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு வழியாக செயல்படுகிறது. பாடநெறிகள், கற்றல் ஆடியோக்கள், குறுகிய வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் வெபினர்கள் உட்பட 260 மணிநேரத்திற்கும் மேலான வசதிகளை ஆசிரியர்களுக்கு வழங்கும். 900 மணி நேர பாடத் திட்டங்கள், செய்முறைக் கற்றல் அடிப்படையிலான சான்றுகள், நெறிகள் என அனைத்தும் இந்தச் செயலியில் உள்ளன. ஒன்றிய அரசு சார்பில் டெல்லியில் சமீபத்தில் இந்தச் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
The post தி டீச்சர்ஸ் ஆப்! appeared first on Dinakaran.