தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

2 months ago 8

மதுரை: தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம் என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டு மக்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது பிரதமர் பற்று வைத்துள்ளார்.

நிதி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்னிடம் தெரிவித்துள்ளார். மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? ஆரம்பக்கல்வியில் தாய்மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்களின் ஆலோசனைப்படி தான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்வி கொள்கை மிகவும் அவசியம். தமிழகத்தில் கூட்டணி குறித்த முடிவுகளை தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.

The post தாய் மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article