'தாயின் அன்பை 'சம்பாதிக்க' வேண்டும் என்று குழந்தைகள் உணருவதை விரும்ப மாட்டேன்' - இலியானா

4 days ago 2

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா டி குரூஸ். 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது. இந்த சூழலில், இலியானா சமீபத்தில் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது குழந்தைகளை வளர்ப்பது மற்றும் உண்மையான அன்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "தாயின் அன்பை சம்பாதிக்க வேண்டும் என்று குழந்தைகள் உணருவதை விரும்ப மாட்டேன். அது மிகவும் மோசமான உணர்வு. அன்பு இயற்கையாக வர வேண்டும். அது சம்பாதிக்கக்கூடிய ஒன்றல்ல. மரியாதை மற்றும் மகிழ்ச்சியைப் போலவே, அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும்.

என் குழந்தைகளை அன்பானவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்க விரும்புகிறேன். இதைத்தான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றோரால் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்பதை தெரியப்படுத்த நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்' என்றார்.

Read Entire Article