பெருங்களத்தூர்: தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலம் பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறியதாக, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூரில் நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது: குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் 18 பவுன் செயின் பறிப்பு நடைபெற்று உள்ளது. கஞ்சாபோதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற விஷயங்கள், செயல்களில் அதிமுகவினர் ஈடுபட மாட்டார்கள். ஆனால் திமுகவினர் இதற்கு நேர்மாறாக செயல்படுவார்கள்.