தாம்பரம் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்

2 hours ago 1

சென்னை: சேலையூர் பகுதியில் தாம்பரம் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றியுள்ளனர். தொடர் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஜேசிபி இஐந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.

கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள மேம்பாலம் அருகே தொடங்கி சேலையூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம், வேங்கை வாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வழியாக வேளச்சேரி இணைகிறது. இந்த சாலை 16.3 கிலோமீட்டர் நீளம் உடையது.

இந்த சாலையில் தினமும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகமாக உள்ளது. இதனால் தினமும் அந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் மக்கள் வாகன ஓட்டிகள் கடந்து செல்கிறார்கள். இதற்கு காரணம் சிரிய சாலையாக உள்ளது என்று மக்கள் குற்றசாட்டியுள்ளனர்.

ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் குற்றசாட்டினார். அதன்பிறகு சாலைகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென ஒரு கடையில் தீ பிடித்தது. இதன் காரணமாக ஆக்கிரமிப்புகள் பணிகள் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பு வேளச்சேரி பூண்டி பஜார் பகுதியில் இருந்து ராஜகீழ்ப்பக்கம் வரை முதற்கட்டமாக அகற்றி வருகின்றனர். இராண்டாம் நாளான இன்று சேலையூர் கேம்பரோடு பகுதியில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

The post தாம்பரம் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article