
சென்னை,
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரெயில், இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.