
சென்னை,
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் - மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ந் தேதி முதல் இருந்து 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி , சனி , ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் அதிவேக ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையின் போது பேருந்துகள், மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.