தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்தது தெற்கு ரயில்வே

3 months ago 17

சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும்.

06184 என்ற ரயில் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த மாதம் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் நவம்பர் மாததத்தில் 01,08,15,22,29 ஆகிய தேதிகளிலும் புறப்படும்

06185 என்ற ரயில் கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும் இந்த மாதம் 13,20, 27, ஆகிய தேதிகளிலும் மற்றும் நவம்பர் மாததத்தில் 03,10,17,24, மற்றும் டிசம்பர் மாதம் 01ம் தேதி வரை கோவையில் இருந்து தாம்பரத்திற்கு வந்தடையும்

வாராந்திர சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஓட்டன்சத்திரம்,பழனி, உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, போத்தனுர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கோவைக்கு சென்றடையும்

ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்தது தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Read Entire Article