மகிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யுவி 700 ஆகிய கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதில் 3எக்ஸ்ஓ துவக்க வேரியண்டான எம்எக்ஸ் 1 காத்திருப்பு காலம் 1 ஆண்டாக உள்ளது. மற்ற வேரியண்ட்களுக்கு காத்திருப்பு காலம் 2 வாரம் முதல் 4 மாதங்கள் வரை உள்ளது.
இதுபோல் மகிந்திரா தார் ராக்ஸ் துவக்க வேரியண்டின் காத்திருப்பு காலம் 1.5 ஆண்டுகளாக உள்ளது. மகிந்திரா நிறுவன தயாரிப்புகளில் அதிக காத்திருப்பு காலம் உள்ள கார் இதுதான். உற்பத்தியை அதிகரித்தும் காத்திருப்பு காலம் குறையவில்லை.
The post மகிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ appeared first on Dinakaran.