தாம்பரத்தில் 140 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

1 week ago 4

சென்னை அருகே, தாம்பரம் மாநகர போலீசாருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில், தாம்பரம் சங்கர்நகர் பகுதியில் நேற்று (10-4-2025) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பலநாயுடு என்ற நபரை சோதனை செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபரிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்பலநாயுடு, ஒடிசாவிலிருந்து ஆந்திரா வழியாக கஞ்சாவை அனங்கப்பள்ளி மாவட்டம் நரசிம்மபட்டியைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளான ரகுமான், துர்கா ஆகியோரின் உதவியுடன் வாங்கி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை கொண்டுவர அப்பலநாயுடுவுக்கு உதவிய ரகுமான், துர்கா ஆகிய இருவரையும் கைது செய்ய தாம்பரம் மாநகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article