தான் அடித்த சிக்சரால் காயமடைந்த ரசிகருக்கு பூரன் செய்த செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

4 hours ago 2

லக்னோ,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 12-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 34 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் சிக்சர் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவரின் தலையில் பட்டது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து அந்த ரசிகர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இதனையறிந்த நிக்கோலஸ் பூரன் அந்த ரசிகரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் தம்முடைய தொப்பியை கழற்றி வாழ்த்து செய்தியுடன் கையொப்பமிட்டு அந்த ரசிகருக்கு பரிசாக வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அதை வாங்கிக் கொண்ட அந்த ரசிகர் நன்றி தெரிவித்தார். பூரனின் இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article