தாட்கோ நிறுவனம் வழங்கும் கடைக்கல் இயந்திரம் இயக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

2 weeks ago 2

விருதுநகர், ஜன.22: தாட்கோ நிறுவனம் வழங்கும் கடைக்கல் இயந்திரம் இயக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 10ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி என்டிடிஎப் நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்புக்கு வழி செய்யப்படும்.

பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு முடித்த 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள். தங்கி படிக்கும் வசதியும் பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடித்ததும் ஆரம்ப கால ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ நிறுவனம் வழங்கும் கடைக்கல் இயந்திரம் இயக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article