தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

3 months ago 9

தா.பழூர், பிப். 11: அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருள்மிகு  விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் மற்றும் நந்தி பெருமானுக்கு மாப்பொடி, பால், தயிர், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உள் பகுதியில் பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் தா.பழூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மாள் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,  புரந்தான் சோழிஸ்வரர் கோவில், கோவிந்தபுத்தூர் அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை சமேத ஶ்ரீ கங்கா ஜடேஸ்வரருக்கு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நந்தி பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article