
கோவை,
தவெகவில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பெண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள்.
அது ஒருபோதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடைய பணியாற்றிய அனைத்து தொண்டர்களும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.