தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - வெளியான தகவல்

2 hours ago 2

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதனிடையே, தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக இன்று சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவின. இதனால், தவெக வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படதாக வெளியான தகவலுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்றும், சமூகவலைதளத்தில் போலி செய்தி பரவி வருவதாகவும் தவெக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article