
சென்னை,
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த பரவலான மழை காரணமாக வெப்பம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இந்த வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.