தவெக மாநில நிர்வாகி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: விஜய் இரங்கல்

4 months ago 21

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி சரவணன் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Read Entire Article