தவெக மாநாட்டு பணி 80 சதவீதம் நிறைவு: செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பு; 75 ஆயிரம் இருக்கைகள் அமைப்பு

4 months ago 23

விழுப்புரம்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்அலங்கரிப்பு பணி நடைபெறுகிறது. திடலில் பார்வையாளர்கள் அமரும் இடங்களில், பகல்போல் ஜொலிக்கதிடல் முழுவதும் 15 ஆயிரம் ஹை மாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

திடலின் இருபுறமும் மொபைல் கழிப்பறை அமைக்க 300 தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது. திடலைச் சுற்றி தகர தகடுகளால் மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். மாநாட்டு மேடைக்கு விஜய் மற்றும்சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநாட்டுத் திடலுக்குள் யாரும் வர முடியாதபடி, பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முற்பட்ட விவசாயிகளையும் பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

Read Entire Article