தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள்?

2 months ago 12

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது நெஞ்சில் குடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சினை, மின்சார கட்டணம் உயர்வு, மகளிர் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article