தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் கட்சியின் ஆண்டு விழா நடைபெறும் இடத்தினை நிர்வாகிகள் ஆய்வு

1 week ago 2

மாமல்லபுரம்,பிப்.15: மாமல்லபுரம் அருகே தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும், அக்கட்சியின் ஆண்டு விழா நடைபெறும் இடத்தினை நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரபல நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அக்கட்சியின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா நடத்துவதற்கு அந்த விடுதியில் உள்ள கூட்ட அரங்கு, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, உள்ளிட்ட பலர் நேரில் வந்து நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுவில் பிரபல நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகள் மத்தியில் கட்சி செயல்பாடுகள் குறித்து பேச உள்ளதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்க உள்ளதாகவும், விரைவில் பொதுக் குழுவுக்கான தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

The post தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் கட்சியின் ஆண்டு விழா நடைபெறும் இடத்தினை நிர்வாகிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article