தவெக செயற்குழுக் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்

13 hours ago 5

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை வருகை தந்தார். தற்போது விஜய் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இதனைத்தொடர்ந்து கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்டு வருகிறார். தவெக சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சினை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் முடிவில், கூட்டணி மற்றும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

Read Entire Article