காளையார்கோவில், டிச. 18: காளையார்கோவில் கள்ளத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ராஜேஸ்வரி (65). இவர் காளையார்கோவில் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றுள்ளார். அப்போது, இவருடைய கட்டை பைக்கு பதிலாக வேறோரு கட்டை பையை மாற்றி எடுத்து சென்று விட்டார். அந்த பையில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.50,000 இருந்துள்ளது.
இதுகுறித்து போலீசில் ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெடுவதாவு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் மனைவி நித்தியா (30) என்பவர் மாற்றி எடுத்து சென்ற ராஜேஸ்வரி கட்டை பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்பெண்ணை சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
The post தவறவிட்ட நகை, பணம் போலீசாரிடம் ஒப்படைப்பு: பெண்ணிற்கு பாராட்டு appeared first on Dinakaran.