நெல்லை, ஜன.12: நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரத்தில் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமையில் பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்றத்தொகுதி மேலிட பார்வையாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகிற சட்டமன்றத்தேர்தல் பணி குறித்து எடுத்துக்கூறினார். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மகளிர் அணி துணைத்தலைவர் சந்திரகலா, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மீனவர் அணி துணை அமைப்பாளர் சேவியர் ஜார்ஜ் மற்றும் நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தளபதிசமுத்திரத்தில் திமுக பாகமுகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.