"தளபதி 69" படத்தில் இணைந்த நடிகை பிரியாமணி

3 months ago 29

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். 'தளபதி 69' படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் 5-வது அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

'தளபதி 69' படத்தில் பிரபல நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. .

நடிகை பிரியாமணி ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் கடந்த 2007ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த படத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். அதை தொடர்ந்து மலைக்கோட்டை, ராவணன், சாருலதா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி.

Read Entire Article