
சென்னை,
நடிகர் விஜய் 'தி கோட்' படத்தின் வெற்றியை அடுத்து தனது கடைசி படத்தில் நடிக்க உள்ளார். எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளநிலையில், நேற்று காலை சென்னையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் எச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில், 'தளபதி 69' படத்தின் பூஜை வீடியோயை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.