'தளபதி 69' படத்தின் அப்டேட்

6 months ago 22

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'தளபதி 69' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் 'தளபதி 69' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு அறிவிப்பாக போஸ்டர் வெளியாகலாம் எனத் தெரிகிறது

Read Entire Article