திமுக-வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக-வில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு விஜய் ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்தவர். அதுவே அவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து...