சிவகங்கை, ஏப். 2: சிவகங்கையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையர் முத்துக்குமார் தேர்தலை நடத்தினார். மாநில துணைத் தலைவர் பீட்டர்லெமாயு, மாவட்டச் செயலர் வடிவேலு ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டனர்.
இதில் மாவட்டத் தலைவராக ராமர், மாவட்ட செயலராக சேவியர்ஆரோக்கியதாஸ், பொருளாளராக ஆரோக்கியராஜா, அமைப்புச் செயலராக முத்துப்பாண்டி தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவராக ஈஸ்வரிஜவகர், இணைச்செயலராக முத்துப்பாண்டி, மகளிரணிச் செயலராக விண்ணரசி, இணைச் செயலராக லதா, சிவகங்கை கல்வி மாவட்டத் தலைவராக முருகன், செயலராக சத்யசேகர், பொருளாளராக புகழேந்தி தேர்வு செய்யப்பட்டனர்.
The post தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.