
சென்னை,
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவின் 'தலை'நகரில் பாரதிய ஜனதா கட்சி 'தலை' நிமிர்கிறது.... ஆம் ஆத்மி..... 'தலை'குனிகிறது
காங்கிரஸ்.... 'நிலை ' குலைகிறது. என பதிவிட்டுள்ளார்.