‘தற்காலிக புயல்’ முதல் தமிழகத்தில் மழை அளவு வரை: பாலச்சந்திரன் விளக்கம்

2 hours ago 2

சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப் பெறக்கூடும். அதன்பின்னர் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 30-ம் தேதி) கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கின்றபோது, பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.

Read Entire Article