தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்: கவர்னருக்கு அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் கடிதம்

6 months ago 17

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படித்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என். ரவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

"அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. துணை வேந்தர் இருந்திருந்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். வெளிநபர்கள் பலரும் நடைபயிற்சி செய்வதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதி இன்றி வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வாக்கிங் வரும் நபர்களை கண்காணிக்க வேண்டும். மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணை வேந்தராக நியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். 24 மணி நேரமும் ரோந்து சென்று காவலாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்"

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

 

Read Entire Article