தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும்

1 month ago 6

நாமக்கல், ஏப்.17: நாமக்கல் மாவட்டத்தில் கோடைபருவ பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சித்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கோடைமழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி கோடை பருவ பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த பருவத்தில் தட்டைப்பயறு, நிலக்கடலை, பாசிப்பயறு, சோளம் மற்றும் கோடைப்பருவ காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம். நல்ல தரமான விதைகளை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்கி விவசாயிகள் பயன்படுத்தலாம். விதைகளை வாங்கும் போது, கண்டிப்பாக விலைப்பட்டியல் பெற வேண்டும். அதில், பயிர் ரகம், நிலை, வாங்கிய நாள், காலாவதி நாள் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, மகசூலுக்கு உதவ வேண்டும். தரமற்ற விதைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்ாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article