சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து தாயாரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள்(92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.