தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்

6 months ago 39
சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை முயல்கரடில் தம்பியை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார். ரிக் வண்டி ஓட்டி வரும் சின்னத்துரைக்கும் அவரது தம்பியான கோபிக்கும் இடையே 700 சதுர அடி நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னத்துரையின் வீட்டிற்கு மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்ட கோபியை, காய்கறி நறுக்கும் கத்தியால் சின்னத்துரை குத்திக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read Entire Article