தம்பதிக்கு கத்திக்குத்து வீடியோ வைரலால் வாலிபர் சிக்கினார்

2 months ago 10

தண்டையார்பேட்டை: அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19ம் தேதி வாலிபர் ஒருவர் ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபரை கத்தியால் தாக்கினார். இதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது குறித்து புகார் ஏதும் வராததால் அயனாவரம் போலீசார் வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், வில்லிவாக்கம் சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் புளியந்தோப்பை சேர்ந்த சந்தோஷம் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக சந்தோஷ் மணிகண்டனை மடக்கி கத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அயனாவரம் போலீசார் சந்தோசை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தம்பதிக்கு கத்திக்குத்து வீடியோ வைரலால் வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article