தேவையானவை:
மண் சட்டி – 1,
பரோட்டா – 3,
சில்லி சிக்கன் – 100 கிராம்,
சிந்தாமணி சிக்கன் – ஒரு பிளேட்,
பாதாம் – தேவையான அளவு,
மல்லி இலை – சிறிதளவு,
சிக்கன் கிரேவி – தேவையான அளவு,
அவித்த முட்டை – 2,
வாழை இலை – வட்டமாக நறுக்கியது 2
செய்முறை:
எடுத்து வைத்திருக்கிற மண்பானையில் நறுக்கி வைத்திருக்கிற வாழை இலையை வைத்து அதில் பரோட்டாவை வைக்க வேண்டும். அதன் மீது சில்லி சிக்கனை பரப்பி, சிறிதளவு மல்லி இலையை தூவி, ஸ்பெஷல் கிரேவியை ஊற்ற வேண்டும். அதன் மீது இன்னொரு பரோட்டாவை வைத்து, சிந்தாமணி சிக்கனை வைக்க வேண்டும். பிறகு மீண்டும் கிரேவியை ஊற்றி, மல்லி இலைகளை தூவி, இன்னொரு பரோட்டாவை வைக்க வேண்டும். கடைசியாக, எடுத்து வைத்திருக்கிற பாதாம் பருப்புகளை தூவி, அவித்த முட்டையை 4 ஆக நறுக்கி மேலே வைத்து, மீண்டும் கிரேவியை ஊற்றி, வாழைஇலையால் மூடி, மண் பானையோடு அடுப்பில் வைத்து 2 நிமிடங்களில் எடுத்தால் தம் பரோட்டா ரெடி.
The post தம் பரோட்டா appeared first on Dinakaran.