தமிழ்நாட்டு மக்களை பாஜக புறக்கணிக்கிறது; துணை முதல்வர் உதயநிதியை ஒருமையில் பேசுவதா?: திமுக கண்டனம்!!

3 months ago 9

சென்னை: தமிழ்நாட்டு மக்களை பாஜக புறக்கணிக்கிறது என திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு புறக்கணிக்கிறது: தமிழன் பிரசன்னா
தமிழ்நாட்டு மக்களை பாஜக புறக்கணிக்கிறது. புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி என்று எந்த ஒப்பந்தமும் இல்லை. பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பதால் நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது.

பொய்யான தகவல்களை அண்ணாமலை கூறி வருகிறார்: தமிழன் பிரசன்னா
தேசிய பேரிடர் நிதியில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை. சட்டப்பூர்வமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை ஒன்றிய பாஜக அரசு தடுக்கிறது. பொய்யான தகவல்களை அண்ணாமலை கூறி வருகிறார்.

“இரு மொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு வளர்ந்தது”
இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். இரு மொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு வளர்ந்தது; பொய்யான தகவல்களை அண்ணாமலை கூறி வருகிறார்.

“ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாதவர் அண்ணாமலை”
ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாதவர் அண்ணாமலை; எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் செய்தவர் உதயநிதி.

“புதிய கல்விக் கொள்கையை திணிப்பது எதேச்சதிகாரம்”
புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தை திணிப்பதன் மூலம் வருணாசிரமத்தை மீண்டும் நிலைநாட்டப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை திணிப்பது எதேச்சதிகாரம் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

“வருணாசிரமத்தை திணிப்பதே புதிய கல்விக் கொள்கை”: தமிழன் பிரசன்னா
மும்மொழிக் கொள்கையால் வடமாநிலங்களில் தாய்மொழி அழிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கான சட்டப்பூர்வ உரிமையை ஒன்றிய பாஜக அரசு தடுகிறது. ஒன்றிய பாஜக அரசு நிலைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா, பீகாருக்கு நிதியை ஒதுக்குகிறார்கள்.

துணை முதல்வர் உதயநிதியை ஒருமையில் பேசுவதா?: தமிழன் பிரசன்னா
துணை முதல்வர் உதயநிதியை ஒருமையில் பேசுவதா? என்று அண்ணாமலைக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது புதிய கல்விக் கொள்கை விவகராத்தில் என்ன செய்தார்கள்? என தமிழன் பிரசன்னா கேள்வி எழுப்பினார்.

The post தமிழ்நாட்டு மக்களை பாஜக புறக்கணிக்கிறது; துணை முதல்வர் உதயநிதியை ஒருமையில் பேசுவதா?: திமுக கண்டனம்!! appeared first on Dinakaran.

Read Entire Article