'தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

7 months ago 27

சென்னை,

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் தயவில்தான் தி.மு.க. நின்று கொண்டிருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

"பொய்க்கால் நடனம் என்ற தமிழ் பாரம்பரிய கலாசார நடனம் ஒன்று உள்ளது. அந்த நடனத்தை ஆடுபவர் மிக உயரமாக இருப்பார். அவரை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் அவரது உயரத்திற்கு கட்டை கால்தான் காரணம் என்பது பின்னர்தான் தெரியும்.

அதேபோல் தன் சொந்த காலில் நிற்கும் தகுதியை இழந்துவிட்ட தி.மு.க., பொய்க்கால் நடனம் போல் தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் தயவில்தான் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article