சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக கடந்த 10ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித்ஷா, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அப்போது தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்றார்.
இதையடுத்து பாஜகவுடன் கூட்டணிதான், கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி,. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மரியாதை மலர் தூவி மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து அதிமுக எம்.பி. தம்பிதுரை சென்னை கிண்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி இதுவரையும் கிடையாது; இனியும் இருக்கப்போவதும் இல்லை. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஐ. வென்றால் கூட்டணி ஆட்சி கிடையாது. 2026ல் வெற்றி பெற்றால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் கிடையாது; இனியும் இருக்கப்போவதும் இல்லை: தம்பிதுரை எம்.பி. திட்டவட்டம்!! appeared first on Dinakaran.