தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே கவர்னர் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் - செல்வப்பெருந்தகை

7 hours ago 1

சென்னை,

வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம். அதனால்தான் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் 'சிந்து-சரஸ்வதி நாகரிகம்' என்ற பாடத்தின் மூலம் இல்லாத ஒரு நாகரிகத்தை கட்டமைக்க முயற்சி செய்தது பா.ஜ.க. இன்று கவர்னர் 'சிந்து சமவெளி நாகரிகம்' என்பதற்கு பதிலாக 'சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் கவர்னர்.

பா.ஜ.க. அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் 'வாட்ஸ் அப் பல்கலைக்கழக'த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம். அதனால்தான் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article