சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயராம், அரசு செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை வாயிலாக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும்பட்சத்தில் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதருவதை உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக எடுக்கப்படஉள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் முன்கூட்டியே நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு விதமான தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.