தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 days ago 3

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரமும், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து வருகிறது. அப்போது மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

சபாநாயகரை கை நீட்டி பேசுவது மரபல்ல..நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கை குறை கூற வேண்டாம். தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த மாநில விரோத சக்திகள், தமிழர் விரோத சக்திகள் முயற்சிக்கின்றன;தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது . என தெரிவித்தார் . 

Read Entire Article