பள்ளி மாணவி பலாத்கார வழக்கு கொடூர கும்பலை பிடிக்க தீவிரம்: சிறுமி பலாத்கார வழக்கில் கைதானவர்கள்

3 hours ago 3

திருவனந்தபுரம்: பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில் தலைமறைவான கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான பிளஸ் டூ மாணவியான விளையாட்டு வீராங்கனை அவரது காதலன் உள்பட 60க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பலாத்காரம் செய்தவர்களின் 30க்கும் மேற்பட்டோரின் எண்களை அந்த மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். தன்னை 64 பேர் பலாத்காரம் செய்ததாக மாணவி போலீசிடம் கூறினார். இதில் இதுவரை 62 பேரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கில் ஒரு பிளஸ் 2 மாணவன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்தவரும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த ஒருவரும், 2 சகோதரர்களும், ஆட்டோ டிரைவர்களும் உள்ளனர்.காரில் வைத்தும், மாணவி படித்த பள்ளியில் வைத்தும், விளையாட்டு முகாமில் வைத்தும், வீட்டிலும் பலாத்காரம் நடந்துள்ளது. ஓட்டல்கள் உள்பட பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மிக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி வினோத்குமார் கூறினார்.

The post பள்ளி மாணவி பலாத்கார வழக்கு கொடூர கும்பலை பிடிக்க தீவிரம்: சிறுமி பலாத்கார வழக்கில் கைதானவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article